பெங்களூரு: பால்கனி இடிந்து 7 பேர் மரணம்;14 பேர் காயம்
பெங்களூருவின் பாரதிநகர் நேருபுறா பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தின் முதல்மாடி பால்கனி நேற்று இரவு இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணமடைந்தனர். பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். மாநகராட்சி கட்டிய இந்த அடுக்ககத்தில் இடிந்த வீட்டுக்கு சொந்தக்காரர் ஹரோன் பாசா ஒரு பழ வியாபாரி. அவரது மகளின் நிச்சயதார்த்தவிழாவிற்காக அவரது நண்பர்களும் உறவினர்களும் கூடியிருந்தபோது இந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. இறந்தவர்கள்.. சல்மா(42),தஸ்லீனா பானு (32), ரெஹ்னா(16), முகமது இஸ்மாயில் (25), சயித் சமீர் மற்றும் அவரது மகன் ஃபைசான் (2). ஏழாவது நபர் அடையாளம் காணப்படவில்லை. மூவர் மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே இறந்திருந்தனர்; ஏனையர் பௌரிங் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி இறந்தனர்.காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் சிகிட்சை பெறுகின்றனர்.
இரவு 8.30க்கு நடந்த சம்பவத்தின்போது அருகில் தேநீர்கடை வைத்திருந்தவர் சத்தத்தையும் அடிபட்டவர்கள் அலறலையும் கேட்டு உதவிக்கு ஓடி வந்தார். காவல்துறையினரும் செய்தியறிந்ததும் உடனே விரைந்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் என்று துணை காவல் ஆணையர்(கிழக்கு) பி.கே சிங் கூறினார்.
குறிச்சொற்கள்: பெங்களூரு, Balcony collapse, Bangaloreஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்