குஜராத்: மேலும் 22 பேர் போலி என்கவுண்டரில் கொலை ? | சற்றுமுன்...




குஜராத்: மேலும் 22 பேர் போலி என்கவுண்டரில் கொலை ?

சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG  வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர்.

இதுகுறித்து சக்கரவர்த்தி கூறுகையில், குஜராத் போலீஸார், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்றவர்கள் அனைவருமே அப்பாவிகள். மோடியைக் கொல்ல முயன்றதாக கூறி இவர்களை குஜராத் போலீஸார் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதை கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், அவர்களின் வக்கீல்கள், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன் என்றார்.

இந்த ஆவணப்படம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து குஜராத் அரசும், காவல்துறையும் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

கீழ்கண்ட செய்திகளின் அடிப்படையில்…..
CNNIBN
தட்ஸ்தமிழ்.கொம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்