துபாய் காவல்துறை அதிரடி ; பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்வோர் கைது
துபாய் காவல்துறை அதிரடி ; பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்வோர் கைது
துபாய் வளைகுடாவில் வணிகத்தில் உயர்ந்து வரும் உன்னத நகரம். இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் இங்கு தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி கிழக்கு ஆசியா, சீனா, இந்தியா, பங்களாதேஷ், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களை வேலை வாங்கித் தருவதாக வாக்களித்து பாலியல் கொடுமைகளுக்கு சிலர் உள்ளாக்கி வருகின்றனர்.
இதனை அறிந்த துபாய் காவல்துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடி சோதனையில் இறங்கியது. இதன் காரணமாக 240 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பெண்கள் மட்டுமல்லாது அங்கு சென்ற ஆண் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இதுபோன்ற பல சோதனைகள் ஆங்காங்கு நடைபெற்று இருந்தாலும் அவை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களில் சிலர் காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதில்லை எனும் மனோபாவம் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.
இத்தகைய மனோபாவத்தைத் போக்கிடவும், இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனும் அறிவிப்பு இதன் மூலம் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4,300 பேர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பெண்களைக் கடத்தி பாலியியல் தொழிலில் ஈடுபடுத்துவோர் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை தண்டிக்கப்படுவர் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கீழ்க்கண்ட எண்களில் தகவல் தரலாம். தகவல் தருவோர் எவ்வித அச்சத்துக்கும் ஆளாகத் தேவையில்லை.
தொலைபேசி எண் : 800 4888
தொலைநகல் (Fax) : 04 209 7777
மின்னஞ்சல் : alameen@eim.ae
http://archive.gulfnews.com/articles/07/12/05/10172496.html
Police smash huge prostitution ring
குறிச்சொற்கள்: தொலைபேசி, துபாய், வளைகுடா, ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, கைதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்