வெனிசுவேலா அரசியல் சாசன திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அதிபர் ஹியூகோ சாவேஸ் தோல்வி
1998 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற பிறகு ஹியூகோ சாவேஸ் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் தோல்வி இதுதான்.
வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ், நாட்டின் அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த போதிலும், மீண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.
நேற்று ஞாயிறன்று இது தொடர்பில் வெனிசுவேலாவில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பிரேரணைகள் தோல்வியடைந்தன. எதிர்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் சிறிய அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை ஒப்புக்கொண்டுள்ள அதிபர் சாவேஸ், இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு அதிபர் பதவியை வகிப்பபவர்கள் இரண்டு ஆண்டு காலம்தான் பதவியில் இருக்கலாம் என்கிற சட்டத்தை விலக்கும் வகையிலும், தமக்கு பிறகும் சோஷசிஸ சித்தாதங்கள் அங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்படும் முகமாக வழி செய்யும் விதத்திலும் அவர் அங்கு அரசியல் சாசனதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பியிருந்தார்.
நன்றி: தமிழ் பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | Americas | Chavez: ‘Reform timing a mistake’
2. Venezuela Vote Sets Roadblocks on Chávez Path - New York Times
3. Voters reject bid by Hugo Chavez to become president for life - Times Online
குறிச்சொற்கள்: தேர்தல், அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்