மும்பையில் நில உச்சவரம்புச் சட்டம் இரத்து; கட்டுமான பங்குகள் உயர்வு
மகாராட்டிர சட்டமன்றம் இன்று ஊரக நில உச்சவரம்புச் சட்டத்தை இரத்து செய்தது. இதனால் மும்பையின் முக்கிய பகுதிகளில் பெரும் நிலப்பரப்பு கட்டிடங்கள் கட்ட கிடைத்துள்ளது. கட்டிடங்கள் கட்டும் பணியில் உள்ள நிறுவனக்களின் பங்குகள் இன்று மளமளவென்று உயர்ந்தன. முப்பது ஆண்டுகளாக இருந்த சட்டம் வீடுகள், அலுவலகங்களுக்கான கட்டிடங்கள் கட்ட தடையாக இருந்ததால் குடியிருப்பு விலைகள் ஏறுமுகமாக இருந்ததாகவும் இனி பெரும் நிலப்பரப்பு கிடைப்பதால் அவ்விலைகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. 15,000இலிருந்து 17,000 ஏக்கரா வரை நிலம் விடுவிக்கப்படும் என மதிப்பிடப் படுகிறது.
குறிச்சொற்கள்: சட்டமன்றம், சட்டம், மும்பைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்