புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படவேண்டும்: பாமக | சற்றுமுன்...




புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படவேண்டும்: பாமக

நாடாளுமன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எம் இராம்தாஸ் புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படவேண்டும், இதனால் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் தில்லியின் ஒப்புதலுக்கு காத்திருக்கவேண்டிய திருக்காது, காலதாமதங்கள் தவிர்க்கப்படும் எனக் கூறினார். இன்று இதழாளர் கூட்டமொன்றில் புதுச்சேரி முதல்வர் என் இரங்கசாமி தன்னுடன் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தில்லி சென்று இதனை வலியுறுத்தி மனு கொடுக்கலாம் என ஆலோசனை வழங்கினார்.

காரைக்கால் போராட்டக் குழு (Karaikal Struggle Group)வினரின் கோரிக்கையான தங்கள் பகுதி மட்டும் தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவது ‘இயலாத காரியம்’ என்றார். அது தனி யூ.டி ஆனால் சட்டமன்றம் அமைக்கப்படாது; இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்படையும் என்றார்.

The Hindu

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்