வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபர் போட்டி- இறுதிச் சுற்றில் சையத் சலாஹூதின்
வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபர் போட்டி- இறுதிச் சுற்றில் சையத் சலாஹூதின்
திங்கள்கிழமை, நவம்பர் 12, 2007
துபாய்: வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசிய தொழிலதிபரை தேர்வு செய்ய நடந்து வரும் ஆன்லைன் வாக்கெடுப்பில் (ABA ME) தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையத் முகம்மத் சலாஹூதின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கீழக்கரையைச் சேர்ந்த சலாஹூதின் வளைகுடா உள்பட உலகின் 20 நாடுகளில் பரந்து விரிந்துள்ள ஈடிஏ தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். 5 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன் 60,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
இந் நிலையில் வளைகுடாவின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஆசிய தொழிலபர்கள் யார் என்ற ஆன்லைன் வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளார் சலாஹூதின். ஒருமாத காலம் நடந்த இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, நடுவர் குழுவினர் பல்வேறு ஆய்வுகள்-ஆலோசனைகளை நடத்தியும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்தும் இறுதிச் சுற்றுக்கு தொழிலதிபர்களை தேர்வு செய்துள்ளது.
தொழிலில் அதிக லாபம் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை வெற்றியோடு சமூகத்துக்கு செய்த சேவைகள், நாட்டின் வளர்ச்சிக்கும், தொழிலாளர் முன்னேற்றத்துக்கு செய்த பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் வளைகுடாவின் வளர்ச்சிக்கு உதவிய மிகச் சிறந்த ஆசியர் (Outstanding Asian Contribution to the ME Development) மற்றும் மிகச் சிறந்த ஆசிய தொழிலபதிபர் (Asian Business Leader of the Year) ஆகிய பிரிவுகளின் கீழ் இறுதிச் சுற்றுக்கு சையத் சலாஹூதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வளைகுடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழரும் தொழில்துறை நிர்வாகியுமான எம்ஜேஎம் இக்பால் கூறுகையில், கூர்மையான தொழில் அறிவும், செய்யும் தொழிலில் நேர்மையும், எளிமையும், தொழிலாளர்களுடன் அன்புடன் பழகும்தன்மையும் வாய்ந்த சலாஹூதின் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை என்றார்.
வரும் டிசம்பர் 1ம் தேதி வரை கிடைக்கும் ஆன்லைன் வாக்குகள், எஸ்எம்எஸ்களின் அடிப்படையில் வெற்றியாளர் இறுதி செய்யப்படுவார்.
தமிழரான சையத் சலாஹூதின் வெல்ல, வாழ்த்தி துணை நிற்போம்.
குறிச்சொற்கள்: துபாய், வளைகுடாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்