வேலை வாய்ப்புச் செய்திகள் | சற்றுமுன்...




வேலை வாய்ப்புச் செய்திகள்

வேலை வாய்ப்புச் செய்திகள்

 

இந்திய ராணுவம் மற்றும் உளவு அதிகாரி பணி வாய்ப்பு

ராணுவ வேலைவாய்ப்பு
கேரளாவிலுள்ள எழிலாவில் இந்திய கப்பற்படையின் நேவி அகாடமி அமைந்துள்ளது. இதில் சிறப்புப் பயிற்சி தரப்பட்டு பின்பு கப்பற்படையின் கல்விப் பிரிவில் குறுகிய கால அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பைக் கப்பற்படை அறிவித்துள்ளது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

ஆகஸ்ட் 2, 1983-லிருந்து ஆகஸ்ட் 1, 1987-க்குள் பிறந்திருக்க வேண்டும். அதாவது 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ், எல்க்ட்ரிகல், மெக்கானிக்கல், அய்.டி., கம்ப்யூட்டர் அறிவியல் இவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக் படிப்பைப் படித்து குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் களுடன் தேறியிருக்க வேண்டும். அல்லது கணிதம் அல்லது இயற்பியலில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டமேற்படிப்பு முடித்திருக்கவேண்டும். தற்போது இவற்றில் படிப்பவர் விண்ணப்பிக்க வேண்டாம்.
குறைந்தது 157 செ.மீ. உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

5 நாள்கள் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப் படும். இவை பெங்களூரு, கோவை மற்றும் போபாலில் நடத்தப்படும்.
இன்டலிஜென்ஸ் தேர்வு, பிக்சர் பெர்சப்ஷன், குழு விவாதம் ஆகியவை முதற் கட்டமாக நடத்தப்படும். இதில் தகுதி பெறுபவருக்கு உளவியல் திறனறியும் தேர்வு, குழுத் திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

முழு விவரங்களும் படிவமும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்டோபர் 6-12 இதழில் தரப்பட்டுள்ளன. பார்த்துக் கொள்ளவும். விண்ணப்பத்துடன் 10ம் வகப்பு சான்றிதழ், அனைத்து செமஸ்டர்களின் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய வற்றின் அட்டெஸ்டட் நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பம் சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:
Post box. 04,
R.K Puram
New Delhi - 110 066
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: நவம்பர் 9, 2007.

உளவு அதிகாரி பணி வாய்ப்பு

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அய்..பி. எனப்படும் உளவுத் துறையில் ஜூனியர் இன்டலி ஜென்ஸ் ஆபீசர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. கிரோடு 2 மோட்டார் டிரான்ஸ்போர்ட் நிலையிலான இந்தப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள்.

தகுதிகள்

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட் டார் கார்களை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றி ருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசத்தையும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஹோம் கார்ட் போன்றவற்றில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவருக்கு முன்னுரிமை. நவம்பர் 6 ஆம் தேதி அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை தரப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பிப்பவர்களில் கல்வித் தகுதிகள், அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு முறைகளுக்கு அழைக்கப் படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

முழு விவரங்களையும் படிவத்தையும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்டோபர் 6-12 தேதியிட்ட இதழில் பார்த்துக் கொள்ளவும். விண்ணப்பத்துடன் 10ம் வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ், அனுபவம் போன்றவற்றுக் கான அட்டெஸ்டட் நகல்களை இணைக்க வேண்டும். 10க்கு 23 செ.மீ. அளவுள்ள சுய முகவரியிட்ட ஸ்டாம்ப் ஒட்டாத உறையை இணைக்க வேண்டும். சமீபத்தில் எடுத்த 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை (ஒன்று ஒட்ட வேண்டும்). விண்ணப்பத்தை சாதாரண தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

Assistant Director

Post Box no. 5319, New delhi - 110 021
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: நவம்பர் 6, 2007

Message from : hussainghani@gmail.com/riyadh-Kingdom of Saudi Arabia

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்