சைமண்ட்ஸ் ‘குரங்கு!’ வதோதரா ரசிகர்கள் கத்தியதாக புகார் - இனவெறி சர்ச்சை

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று முன் தினம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்தது. இதில் இந்தியா வெறும் 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. சச்சினை தவிர்த்து முதல் 5 பேட்ஸ்மேன்கள் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வதோதரா ரசிகர்கள் ‘பாட்டில்’ வீச்சில் இறங்கினர். பின்னர் எல்லைக் கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சைமண்ட்சை குரங்கு என கேலி செய்ததாக கூறப்படுகிறது. கறுப்பு இனத்தை சேர்த்த சைமண்ட்சை திட்டியது இனவெறி பிரச்னையை தூண்டுகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் எழுதியுள்ளன.
இது குறித்து ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு‘ பத்திரிகையில்,”வதோதரா போட்டியில் சைமண்ட்சை நோக்கி இந்திய ரசிகர்கள் தரக்குறைவாக கூச்சலிட்டுள் ளனர். குரங்கு கத்துவது போல் கேலி செய்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் தான் இப்படி நடக்கும்,” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மெல்போர்னில் இருந்து வெளிவரும் ‘தி ஏஜ்’ பத்திரிகையில்,”ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித் துள்ள ஒரே கறுப்பு இன வீரரான சைமண்ட்சை, இந்திய ரசிகர்கள் மோசமாக திட்டியுள் ளார்கள். அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் குரங்கை போல் கத்தி அவரை வெறுப் பேற்றியுள்ளனர்,” என கூறப்பட் டுள்ளது.
சைமண்ட்சை ரசிகர்கள் திட்டிய விவ காரத்தை உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ரசிகர்கள் திட்டியது வருத்தம் அளிக்கிறது. இப்பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என சைமண்ட்ஸ் கேட்டுக் கொண்டார். அவரது வார்த்தைக்கு மதிப்பு அளிக்கி றோம். உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு விட்டு விடுகிறோம், ” என்றார்.
இது குறித்து இந்திய அணியின் மானேஜர் லால்சந்த் ராஜ்புத் கூறுகையில்,”இது நடந்திருக்க கூடாது. ரசிகர்கள் கூட்டத்தை கடடுப்படுத்துவது மிகவும் கடினம். சில சமயங்களில் இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகிறது. ரசிகர்கள் விளையாட்டை ரசித்து பார்க்க வேண்டும். வீரர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக்கூடாது,” என்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) செய்தி தொடர் பாளர் ஒருவர் கூறுகையில்,”இது குறித்து எங்களுக்கு இது வரை எந்த புகாரும் வரவில்லை. இனவெறி தூண்டுதல்களை பொறுத்து கொள்ள முடியாது. இதில் ஐ.சி.சி., உறுதியாக இருக்கிறது. இனவெறி விவகாரத்தில் ஐ.சி.சி., யின் விதிகளும் கடுமையாக உள்ளது,” என்றார்.
இனவெறி தொடர்பான புகாரை வதோதரா காவல்துறையினர் மறுத்துள்ளனர். இது குறித்து காவல்துறை கமிஷனர் பி.சி.தாகூர் கூறுகையில்,”இப் போட்டியில் இந்திய அணி தடுமாற, ரசிகர்கள் ;கணபதிபாபா மோரியா’ என கடவுளை வேண்டி கோஷமிட்டார்கள். இதனை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். சைமண்ட்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராகவும் ரசிகர்கள் ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லவில்லை,” என்றார்.
நன்றி: தினமலர்
மேலும் விவரங்களுக்கு:
1. The Hindu : Sport / Cricket : Symonds subjected to racial abuse
2. Sree’s back for Symonds seconds - Cricket - Sport - smh.com.au
3. AFP: Symonds racially abused in India say Australian cricket officials
குறிச்சொற்கள்: போர், இந்தியா, கால்பந்து, கிரிக்கெட், குஜராத்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
October 13th, 2007 at 8:21 am
…gOOd…