குஜராத் தேர்தல் அறிவிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்விகள் எழுப்பியுள்ளது
குஜராத் மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கீழ்க்கண்ட கேள்விகளை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பியுள்ளது.
1. 2006-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் வன்முறையும் கள்ள ஓட்டுக்களும் இல்லாத கேரளாவுக்கே இந்த நடைமுறை என்றால், கடந்த காலத்தில் இனவன்முறைக்கு உள்ளானதும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அச்சுறுத்தலும் கொண்ட குஜராத் சூழலில் ஏன் இரண்டே இரண்டு கட்ட வாக்குப்பதிவு?
2. மேற்கு வங்காளத்தில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது மட்டுமல்லாமல், கட்சி சார்புடைய அரசுப்பணியாளர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, பிற மாநிலங்களில் இருந்து தேர்தல் முகவர்களை அழைத்து வந்தார்கள். ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அனுதாபிகள் குஜராத் அரசு ஊழியர்களிடையே ஊறி இல்லை என்று தேர்தல் ஆணையம் சாதிக்கின்றதா? இந்த சமயத்தில் அரசு நிர்வாகத்தில் வேலைக்கு இருப்போர் ஆர்.எஸ்.எஸ் இயக்க நடவடிக்கைகளில் பங்குபெறலாம் என்று சர்க்கார் அனுப்பிய சுற்றறிக்கையை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
3. மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில காவல்துறையினர் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தது. குஜராத் காவல்துறையினர் சிலரின் இனப்பாகுபாடு தெளிவாக வெளிப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்துக்கே பயன்படுத்தப்பட்ட இத்தகைய தேசிய இணை இராணுவப்படையை குஜராத் தேர்தலுக்கும் உபயோகிக்க ஏன் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை?
ஆதாரம்: சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்)
குறிச்சொற்கள்: தேர்தல், போர், குஜராத், கேரளாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
October 13th, 2007 at 4:02 am
[…] குஜராத் தேர்தல் அறிவிப்பு குறித்து ம… […]