Security Firm’s License Is Pulled in Iraq | சற்றுமுன்...




பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது

இராக்கிலுள்ள தமது நாட்டுப் படைகளை பாதுக்காக்க, பிளாக்வாட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பல நூறு மில்லியன் டாலர்களை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராக்கில் ஞாயிறன்று பல பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு தனியார் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமத்தை இராக்கின் உள்துறை அமைச்சகம் ரத்துச் செய்துள்ளது. பிளாக்வாட்டர் என்ற அந்த அமெரிக்க நிறுவனம், இராக்கின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற அனுமதிக்கப்படாது என்று இராக்கின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்தத் தடை நிரந்தரமானதா என்பதனை அவர் தெரிவிக்கவில்லை. ஞாயிறன்று பாக்தாதில் அமெரிக்க இராஜதந்திரிகள் பயணம் செய்த வாகனத் தொடரணி தாக்கப்பட்ட சம்பவத்தில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, இதுவரை பிளாக்வாட்டர் நிறுவனம் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:
1. AFP: Iraq orders halt to US firm’s operations after shootout
2. Security Firm’s License Is Pulled in Iraq - New York Times
3. Al Jazeera English - News - Iraq Ends Us Security Firm Licence

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்