அறிவியல் இன்று
மாட்டிறைச்சி சாபிடுவதற்கும் பூமியின் வெப்பத்திற்கும் என்ன சம்பந்தம்??
சம்பந்தம்்பந்தம் இருக்காமே!! இங்கிலாந்து நாட்டின் ஒரு விஞ்ஞானியும்,ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு விஞ்ஞானியும் கூட்டாக செய்திருக்கும் ஒரு
ஆராய்ச்சியில் உலகின் அதிகரித்து வரும் வெப்பத்திற்கு கால்நடைகளினால் ஏற்படும் வெப்பம் பெறுமளவு பங்கு வகிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். உலக அளவில் இறைச்சி உணவு உட்கொள்வதில் 10% வரை குறைக்க முடியும் என்பது இவர்களின் கருத்து.
இதனால் பூமி வெப்பமடைவதை குறைக்க முடியும் என்றும் இவர்களின் ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆராய்ச்சி தொடர்பான செய்தி இந்த பக்கத்தில்.
சிரித்தால் மட்டுமே படம் எடுக்கும் கேமரா
நண்பர்களை ஒன்றாக நிற்கவைத்து படம் எடுத்தபின் எல்லோரும் முறைப்பது போன்ற படம் வந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதா???
இது போன்ற தருணங்கள் இனிமேல் வராமல் தடுக்கலாம்,நீங்கள் சோனி நிறுவனம் வெளியிட இருக்கும் புது புகைப்பட கருவியை வாங்குவதாக இருந்தால். சோனி வெளியிட இருக்கும் “Smile shutter”எனப்படும் புது விதமான புகைப்பட கருவி எதிரில் இருப்பவர் பல்லை காட்டும் வரை தெளிவான படம் எடுக்காது. ஒன்றுக்கும் மேற்பட்டவரை எடுப்பதாக இருந்தால் அவற்றில் ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து அவரின் புன்னகையை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கப்படும்.
தனிமையிலே இனிமை காண முடியுமா??
தனியாக காலத்தை கழிப்பவர்கள் வெகு சுலபமாக நோய்களால் பாதிக்கப்பட்டு,வெகு சீக்கிரம் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு என்று ஒரு புது ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
தனியாக இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வழக்கமாக இருப்பதை விட குறைவாக இருப்பதாக இந்த ஆராய்ச்சி கூ்றுகிறது.
திருமணம் செய்யாமல் தனியாக காலத்தை ஓட்டப்போவதாக சொல்பவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவும்!
செய்தியை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
ஆதாரம்:
Save the planet, 1 less burger at a time: study
Say “cheese”: Sony technology focuses on smiles
Sick? Lonely? Genes tell the tale
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
September 16th, 2007 at 3:58 am
கலாச்சார பொருள்முதல் வாதம்: “பசுக்கள் இந்தியாவில் புனிதமானவையாக ஆனதற்கு எவருடைய சதிவேலையும் காரணமல்ல. அது ஒரு மூட நம்பிக்கை இல்லை. பசுக்களை சாப்பிடக்கூடிய சமூகமாக இந்திய சமூகம் ஆனால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை இந்தியாவில் தோற்றுவிக்கும் என்பதனை ஆதாரப் பூர்வமாக இந்த புத்தகத்தில் நிறுவுகிறார்.”
September 16th, 2007 at 9:00 am
கறி சாப்பிடாமல் இருப்பது, விமானத்தில் போகாமல் இருப்பது போன்று மக்களை தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளச் செல்வது எல்லாம் உலக வெப்பமாதலைக் குறைப்பதற்கான வேலைக்காகாத சுற்று வழிகள் தான். நாடுகள் தங்கள் தொழில் இயங்கு முறைகளை மாற்றுவது தான் முழுமையான தீர்வாக இருக்கும்.
September 16th, 2007 at 12:23 pm
//திருமணம் செய்யாமல் தனியாக காலத்தை ஓட்டப்போவதாக சொல்பவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவும்!//
யாருக்கோ வேண்டுகோள் வைக்கிறமாதிரி தெரியுதே
September 16th, 2007 at 12:24 pm
பாபா லிங்க் வேலை செய்யல..
September 17th, 2007 at 1:40 am
@பாபா


Interesting theory!!
@சிறில் அலெக்ஸ்
யாரையும் மனதில் வைத்துக்கொண்டு சொல்லவில்ல சிறில். பொதுவாக இளைஞர்கள் சிலர் இப்படி கூறி வருவதை கருத்தில் கொண்டு சொன்னேன்!!
@ரவிசங்கர்
எப்படியோ பூமிக்கு உள்ள ஆபத்தை மனிதன் புரிந்துக்கொண்டு பொறுப்பாக செயல்பட்டால் நல்லது!!
February 29th, 2008 at 12:09 am
[…] நிகழ்படங்கள் தருவது. - அறிவியல் இன்று போன்ற முயற்சிகள். - யாகூ, எம்எஸ்என், […]