வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரைக் காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக்கல்வி
வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரைக் காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக்கல்வி
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் பானர் ஆற்றில் படகு ஒன்று சென்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் உதவி கேட்டு குரல் கொடுத்ததும் பர்ஜானா எனும் 15 வயது சிறுமி உடனடியாக ஆற்றில் குதித்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோரை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார்.
பர்ஜானா சிறுவயதிலேயே நீச்சலை கற்றுக் கொண்டதாக அவரது தந்தை ஜமீல் அஹமது தெரிவித்தார். வசதியின்மை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பர்ஜானாவிற்கு இலவசக் கல்வி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தீரச்செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
http://www.indiaenews.com/india/20070915/70394.htm
Teenager to get free education for saving five
குறிச்சொற்கள்: விருதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்