செய்தித் தொகுப்பு: தினமணி - செப். 13 | சற்றுமுன்...




செய்தித் தொகுப்பு: தினமணி - செப். 13

1. ‘பிரிட்டன் இளைஞர்களுக்கு கிராமங்கள் தெரியவில்லை’: இளவரசர் சார்லஸ் வேதனை - உணவு எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு விளைவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் ஏதும் இளைய சமுதாயத்தினருக்கு தெரிவதில்லை.

2. ஏ.சி. வால்வோ பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைவிட இரண்டரை மடங்கு கட்டணம்: குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 10-ம், அதிகபட்சம் ரூ. 50-ம் வசூலிக்கப்படும்.

3. போக்குவரத்துக் கழகங்களுக்குள் போட்டி: பஸ் நிலையத்திற்குள் வராத அரசு பஸ்கள்

விடுமுறை நாள்களில், சில கோட்டங்களைச் சேர்ந்த பஸ்கள், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களை இயக்க இந்த கோட்டங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட அதிகமான பஸ்களை, சேலம் உள்ளிட்ட சில கோட்டங்கள் விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்குவதை விழுப்புரம் கோட்டத்தினர் கண்டுபிடித்தனர்.

4. தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து -

ஃபென்னர் இந்தியா நிறுவனம் டயர் பேப்பர், சிமென்ட், பால் பண்ணை, அக்ரோ ஜெனிடிக்ஸ் மற்றும் பிற பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்நிறுவனத்தின் முதலீடு ரூ. 200 கோடியாகும்.

லண்டனில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ்பாலின் குழும நிறுவனம் கெப்பாரோ இன்ஜினீயரிங். இந்நிறுவனம் இயந்திர வில்லைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிலக்கோட்டையில் தொடங்கும்.

5. ம.பி.யில் பிளாட்டினம், தங்கம் கண்டுபிடிப்பு

6. பள்ளி ஆசிரியை மீது அபாண்ட பழிபோட்ட டி.வி.க்கு எதிராக என்ன நடவடிக்கை?: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தொலைக்காட்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சொன்ன விளக்கத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினீர்கள். குற்றம் நடந்தால் வழக்கை பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

7. எம்.எஃப். ஹூசைனுக்கு விருது வழங்க கேரள உயர் நீதிமன்றம் தடை - ராஜா ரவி வர்மா விருதை கேரள அரசு வழங்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

8. லாலு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: ‘சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு மட்டுமே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் உரிமை இருக்கிறது. பிகார் அரசுக்கு உரிமை இல்லை. எனவே அந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என்றார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.

9. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகரிக்கும் சாதிகள்: உச்ச நீதிமன்றம் வருத்தம்

நீதிபதிகள், இந்தியாவில் மொத்த சாதிகளின் பட்டியல் இருக்கிறதா என்ற கேட்டனர். எத்தனை சாதிகள் இருக்கின்றன என்ற எல்லையே இல்லாதபோது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தொடர்ந்து சாதிகளைச் சேர்த்து வருவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்