ஷ்ரேயா ரெட்டி, விஷாலின் அண்ணி
பூப்பறிக்க வருகிறோம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விக்ரம் கிருஷ்ணா. இவர் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன். இவருக்கு அதற்கு பிறகு வேறேதும் வாய்ப்புகள் வராததால், தனது தந்தையின் வினியோகிஸ்தர் வேலையை செய்து வந்தார். டைரக்டர் ஷங்கரின் அசிஸ்டண்ட் காந்திக்ரிஷ்ணா ஒரு கதையை இந்த நிறுவனத்திடம் சொன்னார். கதை பிடித்து போகவே, தாங்களே தயாரிப்பதாக சொல்ல, நாயகனாக்கினார் தனது தம்பி விஷாலை, விக்ரம் கிருஷ்ணா. அந்த படம் தான் செல்லமே. இன்று தனது தம்பியை இந்த உயரிய நிலைக்கு கொண்டு வந்தது விக்ரம் கிருஷ்ணாவின் உழைப்பும், திறமையும் தான்.
திமிரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் தயாரிப்பளாரான இவருக்கும், ஷ்ரேயாவிற்கும் மெல்ல நட்பு வளர்ந்து, இன்று காதல் பறவைகளாக தங்கள் காதல் உலகிற்கு சொல்லியுள்ளனர். முதலில் அந்த படத்தில் நடித்த ரீமா சென்னுடன் தான் இவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் உண்மையோ வேறாக இருக்கிறது. வழக்கம் போல சென்னையை இந்த காதல் பறவைகள் சுற்றி வரும் போது, ஷ்ரேயாவிடம் கேட்டபோது, விக்கி தனது நல்ல நண்பன் என்று சொன்னது சரி தான் இப்போதும். நல்ல வாழ்க்கை தோழன் இப்போது.
சமீபத்தில் இந்த காதல் ஜோடிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்வு சிறக்க சற்றுமுன் வாழ்த்துகிறது.
குறிச்சொற்கள்: *சற்றுமுன், சென்னைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
September 11th, 2007 at 1:38 pm
பொதுவாக வருங்காலத்தில், சற்றுமுன் சினிமா செய்திகள் வழமையான கிசு கிசு பாணியின் எழுதப்படும் நாள் வருமோ என்று தயங்க வேண்டி இருக்கிறது. செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஓரிரு வரியில் தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது.