பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் குறைந்தது 25 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி நகரில் இந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
இதில் ஒரு குண்டு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காசீம் மார்கெட் பகுதியிலும் மற்றொன்று ஆர் ஏ பஜார் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் அரசியல் களம் சூடு பிடித்து வரும் நிலையிலும், இரண்டு முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் மற்றும் பேனசீர் புட்டோ ஆகியோர் விரைவில் நாடு திரும்புவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் செம்மசூதி மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு இவ்வாறான குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெற்றுவருகின்றன. அவற்றில் குறைந்தது 60 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களையடுத்து பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தானில் நெருக்கடி நிலை மீண்டும் அமல்படுத்தப்படக்கூடும் எனும் ஊகங்களை அந்நாட்டு உள்துறை அமைச்சர் அப்தாம் அஹமது ஷெர்ப்பாவோ மறுத்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, நாடு திரும்பவுள்ள இரு முன்னாள் பிரதமர்களையும், நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் முன்னர் திரும்புவதை தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகவே இந்தக் குண்டு வெடிப்புகள் பார்க்கப்படுகின்றன என்று இஸ்லாமாபாதிலுள்ள பிபிசியின் உருது சேவையின் ஆசிரியர் அமீர் அஹமது கான் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் பிபிசி
பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி
Al Jazeera English - News - Twin Bombings Hit Pakistan
AFP: Suicide bombers kill 25 in Pakistan army stronghold
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்