தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை. | சற்றுமுன்...




தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.

32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.

வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.

மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.

பி/டி/ஐ செய்திகளிலிருந்து…
Former model found begging on the streets of Delhi

குறிச்சொற்கள்:

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.”

  1. jyothiramalingam சொல்கிறார்:

    Oh! Pityful

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்