August 6th, 2007 | பகுப்புகள்: தமிழ்நாடு, தீர்ப்பு, தீவிரவாதம், நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் |
கோவை குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஐவர் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்ட 84 பேரின் பிணை மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை அல் உம்மாவின் நிறுவனர் எஸ் ஏ பாட்சா உட்பட 69 பேர் மீது தீவிர குற்றங்கள் இழைத்ததாகவும் மற்ற 89 பேர் மீது சில்லறைக் குற்றங்கள் இழைத்ததாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
The Hindu News Update Service
குறிச்சொற்கள்:
நீதி,
குண்டுவெடிப்பு
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 6th, 2007 | பகுப்புகள்: குண்டுவெடிப்பு, சட்டம் - நீதி, தீர்ப்பு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் |
58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 153 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 1998 ஆம்ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
இதில், அல்-உம்மா இயக்கத் தலைவர்கள் பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள் என்று தனிநீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பு கூறினார். குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும், மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாநகர ஆணையர் காந்திராஜன் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்:
தமிழ்நாடு,
நீதி,
பலி,
குண்டுவெடிப்பு
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்