CBI இயக்குனரின் மைத்துனர் கொலை? | சற்றுமுன்...




CBI இயக்குனரின் மைத்துனர் கொலை?

மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் விஜய்சங்கரின் மைத்துனரான கே.டி.திரிபாதி, நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

ஓய்வு பெற்ற பொறியாளரான திரிபாதி(67), தெற்கு தில்லி, “சைனிக் பார்ம்ஸ்’ சாலையில் உள்ள தனது வீட்டில் தனியே வசித்து வந்தார். அவருடைய மனைவி, அமெரிக்காவில் உள்ள ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று திரிபாதி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். அவருடைய கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இதனால், அவர் சாவதற்கு முன் கொலையாளியுடன் கடுமையாக போராடியுள்ளார் என தெரிகிறது. அவருடைய வீட்டில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்