த மு மு க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். | சற்றுமுன்...




த மு மு க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அமெரிக்க போர் கப்பலின் (நிமிட்ஸ்) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை சரியாக 4மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இவ் ஆர்பாட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர் ஆர்பாட்டத்திற்க்கு மாநில தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமைவகித்தார் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி துனைத்தலைவர் அப்துல்ஜலீல் மாநில செயலாளர் ஜே. எஸ். ரிஃபாய், அ. சாதிக் பாஷா, எஸ். முஹம்மது ஜைனுலாப்தீன், எம். தமீமுன் அன்சாரி,பி. அப்துஸ் சமது, துனை செயலாளர்கள் எஸ் எஸ். ஹாரூன் ரஷீது ஜெ. ஹாஜா கனி மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர் பின்னர் செதியாளர்களுக்கு அதன் தலைவர் அளித்த பேட்டியில்…… அமெரிக்காவின் நேச நாடுகளான ஆஸ்த்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகள் கூட தங்கள் மக்களின் பாதுக்காப்பை கருதி இந்தக்கப்பலை தங்கள் கடல் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அமெரிக்க போர்கப்பலில் வருபவர்களை மகிழ்விக்க சென்னைக்கு ஆயிரக்கணக்கான விலை மாதர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி நம்மையெல்லாம் வெட்கி தலைகுனிய வைத்துள்ளது என்றார்.

சற்று முன்க்காக…. நண்பர் அதிரை ரவூஃப்.

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்