`தசாவதாரம்’ படத்தையும் கலைஞர் டி.வி. வாங்கியது
கலைஞர் டி.வி.’ என்ற பெயரில் புதிய சேனல் ஆகஸ்டு 15-ந்தேதி உதயமாகிறது. இந்த சேனலில் ஒளி பரப்ப புதுப்படங்கள் வங்கப்படு கின்றன. ரஜினியின் மெகா பட்ஜெட் படமான சிவாஜி’யை கலைஞர் டி.வி. வாங்கியது. இப்படம் ரிலீசுக்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்படும்.சிவாஜியை தொடர்ந்து கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தையும் வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. `சிவாஜி’யை விட 1000 ரூபாய் அதிகமாக தசாவதாரம் விலை போய் இருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது. 747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது. சிவாஜியை தொடர்ந்து தசாவதாரத்தையும் வாங்கியதன் மூலம் இரு மெகா ஸ்டார்களின் படங்கள் கலைஞர் டி.வி. கைவசமாக்கியுள்ளது. போக்கிரி, தர்மபுரி, முனி, கேடி படங்களையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது. கமலின் பழைய படமான ராஜபார்வை இதுவரை டி.வி. சேனலுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அதையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
June 11th, 2007 at 11:38 am
adu sari…