சற்றுமுன்: சென்னையில் 300 மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது
மதுரையில் அரசியல் ரவுடிகளால்.. படுகொலை செய்யப்பட்ட தினகரன் பத்திரிக்கை ஊழியர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யக்கூறி.. தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தியது. மைலாப்பூர், கச்சேரி சாலை முழுவதும் காவல் துறையினரின் தலலகளே அதிகம் காணப்பட்டன. அந்த வழி போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வாசலில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள். கோஷம் போட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை கைது செய்து நான்கிற்கும் மேற்பட்ட வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
மந்தைவெளியில் இருக்கும் ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிச்சொற்கள்: *சற்றுமுன், சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, கைது, அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
May 12th, 2007 at 11:47 am
பி.க…
May 12th, 2007 at 12:03 pm
என்னத்தை செய்யப்போகிறார்கள் செய்தவரை விட்டு விட்டு சும்மாயிருந்தவரை பெயருக்கு கைது. அவ்வளவுதான்.