35 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
அயர்லாந்துக்கு எதிராக இன்று நடந்த பயிற்சி போட்டியில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. 7 விக்கெட்ட் இழப்பிற்கு 66 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்து சுதாரித்து 192 ரன்களை அடைந்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. பின் அனைத்து விக்கெட்களையும் மடமடவென இழந்து 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடந்த மற்ற போட்டிகளில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடாவையும், இலங்கை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன. கென்யாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 5 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது.
குறிச்சொற்கள்: இலங்கைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்